Still Single? Search, meet and marry. Find your life partner online

வெள்ளி, மே 20, 2011

வடிவேலு தேர்தலுக்கு பின்: ஒரு கற்பனை கலாட்டா

வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்து இட்டு சோபாவில் உட்காருகிறார் வடிவேலு. 


"ஹா...வ்... ச்சேய்... ஏழாவது கொட்டாவி... சாயங்காலம் மூணு மணியிலேர்ந்து தூங்குனா..." 


சமையலறை பக்கம் வேலை செய்யும் மனைவியிடம் திரும்பி, "ஏம்மா... காலெல்லாம் நமநமங்குது... கொஞ்ச தூரம் வாக்கிங் போய் வரவா?" என்கிறார். 


மனைவி கோபமாக,"ஏன் நாளை பின்ன நடக்கிற ஆசை இல்லயா?" என வடிவேலு தனக்குள், "இன்னிக்கு ஆரம்பமே கொஞ்சம் கொடூரமா இருக்கு?" என்கிறார். 


அப்போது வீட்டு வேலை செய்பவர் உள்ளே வர, "ஏம்ப்பா பதவியேற்பு தான் முடிஞ்சிருச்சே... வெளில நிலவரம்லாம் எப்புடி?" 


"நீங்க வேறண்ணே... ஜஸ்ட் ஹின்ட் குடுத்தா போதும்... முப்பதாயிரம் தர்றோம்கிறாய்ங்க" 


"என்னடா கொலைக்குத்தம் பண்ணா மாதிரி பேசுறிங்க... சரி சரி போய் வேலையப் பாரு" 


"ஆறு மாச சம்பளம்ணே" 


"ஆஹா... உட்டா இவனே சாப்பாட்ல வெசம் வெச்சிருவான் போலிருக்கே" 


தனக்குள், "எத்தன நாள் தான் வெளி உலகத்த பாக்காம இருக்குறது... மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு... பாக்கலாம்னா நிஜமாவே வெடிக்கும்னு மெரட்டறானுங்க... சரி... ஆறுதலுக்கு நம்ம அழகிரி அண்ணன் கிட்ட பேசுவோம்" அழகிரிக்கு போன் போட அந்தப்பக்கம் கால் அட்டென்ட் ஆகிறது. 


"ஹலோ..." 


மறுபடியும் "ஹலோ... ஹல்ல்ல்லல்ல்லல்ல்லோ... ஒருவேளை டவர் கெடக்கலயோ" 


"ஏன்யா லோலோன்னு கத்தற? டவர் கெடக்கலன்னா வெளில வந்து பேசு" 


தனக்குள் "அதுக்கு கூட வெளில வர முடியாம பண்ணிட்டாய்ங்களே" சத்தமாக, " அண்ணே இருக்கீங்களா?" "என்ன நக்கலா?" 


"இல்லண்ணே போன்ல கூட சைலன்ட்டாகிட்டீங்களேன்னு தான்... வீட்டுக்குள்ளாறவே எம்புட்டு நாள் தான் இருக்குறது... வெளில போய்ட்டு வரலாமான்னு பாக்குறேண்" 


"ஏய்... என்னப்பா இப்புடி பேசிக்கிட்டிருக்க? இது மெட்ராசில்ல... மதுரப்பா" 


வடிவேலு தனக்குள், "இந்தாளு என்ன சொல்ல வர்றாப்ல, போகவா வேணாவா?" 


"நாங்க இருக்கோம்... அப்டியே போய் மல்லியப்பூ இட்லியும் அஞ்சு வகை சட்னியும் ரோட்டுக்கடைல சாப்டு ஃபோட்டோக்கு போஸ் குடு... மக்கள்ட்ட ஜகஜமா பழகுய்யா" 


"அஹ்ஹ்ஹ்ங்ங்ங்... வேணா மாறுவேசம் ஏதாச்சும்?" 


"நீ என்ன கமலஹாசனா? வேண்ணா தலைல துண்ட போட்டு போ" 


"ஹ்க்கும்... ரொம்ப ஈசியா கண்டுபுடிச்சுடுவாய்ங்களே" என்றபடி கட் செய்கிறார். 


யாருக்கும் சொல்லாமல் தலையில் துண்டை போட்டுக்கொண்டு கிளம்பி நிறைய பேர் ஜாக்கிங் போகும் ரோட்டில் நிற்கிறார். 


கைகளை இருபக்கமும் தூக்கி நெட்டி முறித்து, "எய்யாடி வானத்தயும் பூமியும் பாத்து எம்புட்டு நாளாச்சு... நம்ம டாக்டர் ஓடியாறாப்ல இருக்கு" என மெதுவாக அவருடனே ஓடுகிறார். 


"ஹலோ டாக்டர், நான் தான் வடிவேலு..." 


"அய்யய்யோ... கூட வந்த பாவத்துக்கு என்னயும் போட்டு தள்ளவா எதாச்சும் போலிஸ் கேஸ் ஆயிரப்போவுதுய்யா..." 


"என்னய்யா... இப்பிடித்தான் பேசவே ஆரம்பிக்கிறீங்க" 


"அப்புறம் புதுசா ஆஸ்பித்திரி ஆரம்பிச்சிருக்கேன்" "திறப்பு விழாவுக்கு வரணுமா?" 


"அதெல்லாம் இல்ல, சின்ன உள்காயம்னாலும் சரி, (சத்தமாக) உயிருக்கே பிரச்னைனாலும் சரி அங்க தான் அட்மிட் ஆகணும் சரியா?" 


திரும்பி வீட்டை நோக்கி நடந்து ஆசுவாசமாக ஒரு டீக்கடை பெஞ்சில் செட்டிலாகிறார். அப்போது பஸ்ஸிலிருந்து ஒருவர் உடம்பெல்லாம் ரத்த காயமாக பெட்டி படுக்கையுடன் இறங்க, 


"என்னண்ணே ரண களமா வர்றிங்க... மருந்து கூட போடாம" 


"எத்தன தடவ போடறது" 


"எங்கிருந்து வர்றீங்க"


"மெட்ராசில இருந்து" 


"எப்பிடிண்ணே இப்பிடி" 


"பாக்க வடிவேலு மாதிரி இருக்கோமே, கலக்க போவது யாரு அப்புறம் சினிமா அப்புறம் அரசியல்னு ஒரு ரவுண்டு வரலாம்னு பாத்தேன்" 


"பார்றா" 


"எங்கத்த... ஜாடைல இருக்கிறதுக்கே தேடி தேடி அடிக்கிறானுங்க" 


"இன்னுமா கோவமா இருக்காய்ங்க" 


"சும்மாவா... குடுத்த காசுக்கு சன் டிவி காரன் நிமிஷத்து மூணு தடவ இல்ல போட்டு காட்னான் உங்க டிரைலர" 


"ஆஹா... கண்டுபிடிச்சிட்டியா" என்றபடி மெதுவாக வீட்டை நோக்கி நழுவுகிறார். 


"பாத்துண்ணே... சீக்கிரம் வீட்டுக்குள்ள செட்டிலாகிருங்க... பஸ்ல கூட மூணு பேரு வெச்சு அடிச்சாய்ங்க..." 


"நம்மள மாதிரி இருந்ததுக்கேவாம்... ஆவ்வ்வ்வ்வ்வ்..." என்றபடி வீட்டை நோக்கி வேகவேகமாக நடக்க எதிரில் வருபவர் மீது மோதுகிறார். 


"ஏய்யா... பாத்து வரப்படாதா... ஏய்... வடிவேலுவா...?" 


"அட... சிங்கமுத்து... எப்டியிருக்கப்பா... எம்மேல கோவம் ஏதுமில்லயே" 


"சேசே... என்னப்பா ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிட்டு... ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்யா" 


"மேடைல பேசினத சொல்றியா..." 


"அதுக்கப்புறம் வெளில நடமாடுறத சொல்றேன்..." 


வடிவேலு மனதுக்குள், " ஒரு ரேஞ்சா ஆரம்பிக்கிறானே... பத்தடி நடந்தா வீடு... முடியுமான்னு தெரியலயே..." 


"அப்புறம் எங்க தங்கியுருக்காப்ல" 


"நானே ஒளிஞ்சிருக்கேன்... அதயும் இவன்கிட்ட சொல்ல முடியுமா? என்னா வில்லத்தனம்" சத்தமாக, "பக்கத்தில தான்" உடனே சிங்க முத்து முகம் பிரகாசமாகிறது, 


"அப்படியா..." 


"ஆமா நீ எதுக்கு மதுர வந்த?" 


"உன்ன கண்டுபிடிக்க முடியலன்னு ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட்ல வரச்சொன்னாங்க" என்றபடி போனில், "ஆள் ரெடிப்பா... கெளம்புங்க" என்கிறார். 


வடிவேலு, "ஆஹா... இன்னும் எத்தன நாளுக்கு மறைஞ்சிருக்கணுமோ தெரியலயே" என்றபடி தலை தெறிக்க ஓடுகிறார்.

posted by Thats Secret at 9:13 பிற்பகல் 0 comments links to this post

செவ்வாய், டிசம்பர் 15, 2009

R K லக்ஷ்மண் கார்ட்டூன்posted by Thats Secret at 7:55 பிற்பகல் 0 comments links to this post

திங்கள், செப்டம்பர் 29, 2008

எழுத்தாளன்

அந்த இளைஞன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்பட்டான். தன்னுடைய எழுத்துக்களை உலகம் முழுதும் படிக்க வேண்டுமென்று நினைத்தான், மக்கள் உணர்ச்சிகரமாக வாசிக்க வேண்டும், அழ வேண்டும், கத்த வேண்டும், வலிக்க வேண்டும் என்று விரும்பினான்.

-

-

-

-

-

-

இப்போது அவன் மைக்ரோஸாப்டில் எர்ரர் மெஸேஜ் எழுதிக்கொண்டிருக்கிறான்.

லேபிள்கள்:

posted by Thats Secret at 8:00 முற்பகல் 1 comments links to this post