யோசனை
ஒரு விழாவில் டாக்டர் தன் பழைய வக்கீல் நண்பரை சந்தித்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் வந்து டாக்டரிடம் உடல் தொந்தரவு சம்பந்தமான டிப்ஸ் கேட்க அதை விளக்க வேண்டியதாகி விட்டது. இதே போல் ஐந்தாறு தடவை நிறைய பேர் வந்து கேட்க அவர்கள் பேச்சு தடை பட்டது. எரிச்சலான டாக்டர் வக்கீலிடம், “இது மாதிரி உங்களிடம் சட்ட சம்பந்தமான விளக்கம் கேட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
அவர் உடனே, “விளக்கம் சொல்வேன், ஆனால் மறு நாள் 100 ரூபாய் பில் அனுப்பி விடுவேன்” என்றார்.
கொஞ்சம் தர்மசங்கடமாக உணர்ந்த டாக்டர் அன்று முழுக்க யோசித்து டிப்ஸ் கேட்டவர்களுக்கு மறு நாள் பில் அனுப்ப முடிவு செய்தார்.
மிகவும் யோசனையோடு சென்றவர், வேண்டாமென்று முடிவு செய்து திரும்பினார். அங்கே தபால் பெட்டியல் 100 ரூபாய்க்கான பில் வக்கீலிடமிருந்து வந்திருந்தது.
posted by Thats Secret at 8:00 AM


1 Comments:
நல்ல நகைச்சுவை!
நன்றி
கருத்துரையிடுக
<< Home