Still Single? Search, meet and marry. Find your life partner online

திங்கள், செப்டம்பர் 22, 2008

மனைவியை ஏமாற்ற முடியாது

திடீரென ஆபிஸில் இருந்து போன்

“டார்லிங்... இந்த வாரம் எங்க ஆபிஸில் ஃபிஷிங் டூர் போறோம். அதனால ஒரு வாரத்துக்கு தேவையான துணியெல்லாம் எடுத்து வெச்சிடு. அப்டியே மீன் பிடிக்கிற தூண்டில், முள், அதெல்லாம் வைக்கிற பிஷ்ஷிங் டூல் பாக்ஸ் எல்லாத்தயும் எடுத்து வெச்சிடு. ஆபிஸ்ல இருந்து அப்டியே கிளம்பறேன் ஸோ இதெல்லாம் போற வழில அப்டியே எடுத்துட்டு போயிட்றேன். எங்க பாஸ்ஸ இம்ப்ரெஸ் பண்ண சரியான நேரம் இது தான். அப்டியே மறக்காம என்னோட ப்ளூ சில்க் பைஜாமாவ எடுத்து வெச்சிடு”

டொக்

அவளும் பெரிதாக எதிர் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள், அவன் வந்து லக்கேஜ் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

ஒரு வாரம் கழித்து மிகுந்த சோர்வோடு வந்தான்.

“அப்புறம்... பிஷ்ஷிங் எப்படி போனது?”

“அருமை... வாளை மீன், வஞ்ஜிர மீன் எல்லாமே என்னோட தூண்டில்ல தான் கிடைச்சது... ஆமா நான் ப்ளூ சில்க் பைஜாமா எடுத்து வைக்க சொன்னேனே... ஏன் எடுத்து வைக்கல?”

“எடுத்து வெச்சேன் ஹனி... உங்களோட ஃபிஷ்ஷிங் பாக்ஸ்ல...”

லேபிள்கள்: , , , , , , , , ,

posted by Thats Secret at 8:19 PM