கொஞ்சம் வயலன்ட்டான ஜோக்... மெல்லினங்கள் மன்னிக்கவும்
ஒரு தடவ சி.ஐ.ஏ (அமெரிக்க உளவுப் பிரிவு) ல இண்டெர்வியூ நடந்ததாம். முணு பேர் கடைசி ரவுண்டு வரைக்கும் வந்தாங்களாம்.
கடைசி ரவுண்ட்ல மொத ஆள்கிட்ட ஒரு துப்பாக்கிய குடுத்து “உள்ள உங்க வைஃப்-அ கட்டிப் போட்டு வச்சிருக்கோம், போய் கொன்னுட்டு வாங்க”ன்னாங்களாம்
“அதெல்லாம் முடியாதுங்க, பொண்டாட்டியெல்லாம் கொல்ல முடியாது”ன்னுட்டானாம்.
ரெண்டாவது ஆள் வீராவேசமா துப்பாக்கிய வாங்கிட்டுப் போனானாம், கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பி வந்துட்டானாம், “என்னால முடிலீங்க”ன்னானாம்
உங்களுக்கும் சி ஐ ஏ ல சேர தகுதி இல்ல, வைஃப்ப கூட்டிட்டு போங்கன்னுட்டாங்களாம்
மூணாவது ஆள்கிட்ட இதே மாதிரி சொன்னவுடனே துப்பாக்கி எடுத்துட்டு நேரா உள்ள போனானாம், கதவ சாத்துறதுக்குள்ள சுட்ற சத்தம் கேட்டதாம், வரிசையா 10 தடவ சுட்ற சத்தம் கேட்டதாம். வரிசையா கத்தற சத்தம், சேர்ல அடிக்ற சத்தம் கேட்டதாம்.
பதறிப்போய் எல்லாரும் உள்ள போனாங்களாம். சோர்வா வெளில வந்தானாம், “என்னாச்சு என்னாச்சு”ன்னு கேக்க, அவன் சொன்னானாம், “நீங்க குடுத்த துப்பாக்கில சுட்டேன், தோட்டா எல்லாம் போலி, சொன்னத செய்யணும்ல... உக்காந்திருந்த சேர எடுத்து அடிச்சு, சுவத்தில மோதி கஷ்டப்பட்டு கொல்ல வேண்டிதாப்போச்சு”
posted by Thats Secret at 8:28 PM


7 Comments:
:-)))
very good joke
intha maathiri naerla nadakkaathu.. jokelayavathu nadakkattumae...
super...
:)
good joke.
மேலே கமெண்ட் போட்ட அனைவரின், வீட்டுக்கு ஈமெயில் போயிருச்சு
நல்லவேளை குடுகுடுப்பை கமெண்டுக்கு 'கீழ' நான் கமெண்ட் போட்டுருக்கேன்பா
:)))))))))))
கருத்துரையிடுக
<< Home