மங்க் ரகசியம்
ஒரு கார் மங்க்(monk)களின் மடத்திற்கு அருகே வேலை செய்யாமல் நின்று விட்டது.அன்றிரவு அங்கே தங்க அவன் அனுமதி கேட்டான்.அந்த மங்க் தலைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு உணவளித்து காரையும் சரி செய்து அவனை தங்க வைத்தார்.அன்றிரவு அங்கே ஒரு வினோதமான சத்தம் கேட்டது அவன் அந்த மங்க்கிடம் “அது என்ன சத்தம்?” என்றான், அதற்கு அவர்,”அதை மங்க்களிடம் மட்டுமே பகிர்வோம் உனக்கு சொல்ல முடியாது” என்றார்.அவனுக்கு இது ஏமாற்றம் தந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..அங்கிருந்து விடை பெற்றான்.சில வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அவன் கார் அங்கே பிரச்னை செய்தது.
அன்றிரவும் அங்கே தங்க அவன் அனுமதி கேட்டான், அந்த மங்க் தலைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு உணவளித்து காரையும் சரி செய்து அவனை தங்க வைத்தார்.அன்றும் அதே வினோதமான சத்தம் கேட்டது.அதே போல அவன் கேட்க அந்த மங்க் ,”அதை மங்க்களிடம் மட்டுமே பகிர்வோம் உனக்கு சொல்ல முடியாது” என்று சொல்லி விட்டார்.“அது என்ன என்று தெரியாவிட்டால் என் தலை வெடித்து விடும், இதற்காகவே நான் மங்க் ஆகிறேன் அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றான்.அவர் அதற்கு ,”நீ உலகம் முழுக்க சுற்றி எத்தனை பூவிதழ்கள் இருக்கின்றன மற்றும் எத்தனை மணல் துகள்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டும்” என்றார்.
அவன் விடை பெற்றான்.சுமார் 40 வருடங்களுக்கு பிறகு திரும்ப வந்தான்,“நான் உலகமெங்கும் சுற்றி விட்டேன் இதோ உங்கள் கேள்விக்கு பதில்: 1278954483 பூவிதழ்களும், 5769384572949050 மணல் துகள்களும் உள்ளன” என்றான்.அவர்,”வாழ்த்துக்கள் இப்போது நீ மங்க்காகி விட்டாய் உனக்கு அந்த சத்தத்தின் ரகசியத்தை காட்டுகிறேன்” என்று சொல்லி விட்டு அவனிடம் ஒரு சாவியை தந்தார் “அதோ அந்த மரக்கதவின் பின்னால் இருந்து வருகிறது அந்த சத்தம்” என்றார்.
இவன் சென்று அக்கதவை திறந்தான் அங்கே இன்னொரு பிளாட்டின கதவும் சாவியும் இருந்தது அதையும் திறந்தான் அங்கே ஒரு வைரக்கதவும் சாவியும் இருந்தது அதையும் திறந்தான், இதே போல வைடூரியம், மரகதம், கோமேதகம், பிளாஸ்டிக் எல்லா கதவுகளையும் திறந்தான் கடைசியாக தங்க கதவு இருந்தது அதையும் திறந்தான் அங்கே அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அவனுக்கு தெரிந்தது….
அது என்னவென்று உங்களுக்கு சொல்ல முடியாது
ஏனென்றால் நீங்கள் மங்க் கிடையாது
கடுப்போடு என்னை தேட வேண்டாம், எனக்கு இதை அனுப்பியவரை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் (நற நற).
Categories: tease

posted by Thats Secret at 8:27 PM

0 Comments:
கருத்துரையிடுக
<< Home