Still Single? Search, meet and marry. Find your life partner online

திங்கள், மே 22, 2006

தெரியாது

இணைய தளங்கள் அமெரிக்காவையே குறி வைத்து செயல்படுகின்றன என்ற கடுப்பு எனக்கு உண்டு .(அங்கே போக சில மாதங்கள் முன்பு வரை கூட ஆசை இருந்தது எனினும்). அதே போல் ஹாலிவுட் சினிமாக்களில் உலகையே அமெரிக்க ஹீரோ காப்பாற்றுவதும்,கடைசியில் அமெரிக்க கொடி காட்டுவதும் எரிச்சலூட்டும்...அதற்காகவே பழைய ஜோக் என்றாலும் இதை பகிர்கிறேன்

ஐ நா சபை உலக நாடுகளிடையே ஒரு கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டு "Please, tell us honestly what is your opinion about the abundance vs scarcity of food in the rest of the world." என்று கேட்டு ஒரு சுற்றறிக்கை குழு அனுப்பியதாம்.கடைசியில் ஓட்டெடுப்பு தோல்வியில் முடிந்தது, அதற்கான காரணங்களை ஆராய்ந்து அக்குழு அனுப்பிய முடிவுகள் இங்கே:

ஐரோப்பியர்களுக்கு "scarcity" என்றால் என்னவென்று தெரியவில்லை
ஆப்ரிக்கர்களுக்கு "abundance" என்றால் என்னவென்று தெரியவில்லை
சைனீஸ்களுக்கு "opinion" என்றால் என்னவென்று தெரியவில்லை
(ஐயய்யோ) இந்தியர்களுக்கு "honestly" என்றால் என்னவென்று தெரியவில்லை

கடைசியாக
அமெரிக்கர்களுக்கு "rest of the world" என்றால் என்னவென்று தெரியவில்லை

Categories:

posted by Thats Secret at 8:22 PM

1 Comments:

Blogger தேசாந்திரி said...

:-) - for joke

:-(! - for facts

9:22 PM  

கருத்துரையிடுக

<< Home