Still Single? Search, meet and marry. Find your life partner online

செவ்வாய், மே 16, 2006

உலகம் எப்படியும் பேசும்

இது பழைய கதை தான்
ஒரு முறை பட்டினத்தடிகள் வயல் வெளியில படுத்திருந்தாராம் அவ்வழி ரெண்டு பொம்பளைங்க கதிர் சுமந்து போனாங்களாம், முத பொண்ணு பாத்துட்டு "பாருடி முற்றும் துறந்த மகான்"ன்னாளாம்
ரெண்டாவது வந்தவ,"அடிப்போடி தூங்கும்போது கையை தலைமாட்டுல வச்சு தூங்குறாரு இந்த சுகத்தையே மறுக்க முடியல இவரா முற்றும் துறந்தவரு?"ன்னா

அவருக்கும் இது நியாயமாப்பட கையை தலைக்கு வைக்காம தூங்க ஆரம்பிச்சாரு, அந்த பொண்ணுங்க திரும்பி வந்தாங்க, மொத பொண்ணு,"பாருடி நீ சொன்னத கேட்டுட்டு கைய எடுத்துட்டாரு'
அவ சொன்னாளாம்,"அடிப்போடி இவளே நம்ம சொல்றத ஒட்டு கேக்குற இந்தாளா துறவி அது மட்டுமில்லாம உலகம் ஆயிரம் பேசும் அதயெல்லாமா கேக்குறது"ன்னாளாம்.

அதுக்கப்புறம் ஞ்ஞஞ்ஞஞ்ஞஞ்ஞன்னு கொஞ்ச நாள் அவரு நிச்சயம் திரிஞ்சிருப்பாரு
(இந்த லைன் பாட்டி சொன்ன கதைக்கு நான் சொல்ல நினைச்ச கமெண்ட்)

Categories:

posted by Thats Secret at 11:23 AM

2 Comments:

Blogger Radha N said...

:))

2:57 PM  
Blogger கசி said...

அருமை!

1:29 PM  

கருத்துரையிடுக

<< Home