Still Single? Search, meet and marry. Find your life partner online

புதன், மே 31, 2006

மயிலும், காக்கையும்

நான் சிறு வயதில் படித்தது (எந்தக்கட்சியிலும் உறுப்பினரில்லை)

அண்ணா அவர்கள் எம்.பியாக போனபோது ஆட்சிமொழிக்கான தேர்வு நிகழ்ந்து கொண்டிருந்ததாம். ஹிந்தியை வட நாட்டு எம்.பிக்கள் ஆதரிக்க அண்ணா தமிழைப் பரிந்துரைக்க "ஏன் தமிழை பரிந்துரைக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.அவர், "நீங்கள் ஏன் ஹிந்தியை பரிந்துரைக்கிறீர்கள்?" என்றார்."அது தான் இந்தியாவில் அதிகம் பேர் பேசும் மொழி அதனால் அது தான் தேசிய மொழி" என்றிருக்கிறார்கள், அதன்படியே ஹிந்தி தேசிய மொழியானது.

அடுத்து தேசியப்பறவைக்கான தேர்வு, எல்லோரும் மயிலை பரிந்துரைக்க அண்ணா அமைதியாக "காக்கை தான் தேசியப்பறவையாக வேண்டும்" என்றிருக்கிறார், எல்லோரும்,"ஏன் காக்கையைப் போய் பரிந்துரைக்கிறீர்கள்?" என்று கேட்க அண்ணா பொறுமையாக, "அது தானே இந்தியாவில் அதிகம் இருக்கிறது" என்றாராம்.

Categories: ,

posted by Thats Secret at 12:15 PM