Still Single? Search, meet and marry. Find your life partner online

திங்கள், மார்ச் 27, 2006

கடிதம்

ஒரு வீட்ல அம்மா மகளோட பெட்ரூம சுத்தம் பண்ணப்போறப்போ அங்கே எல்லாமே நீட்டா இருக்கு, பெட் நடுவில ஒரு லெட்டர், அதில “டூ மாம்”னு இருக்கு.பயத்தோட பிரிச்சு படிக்கிறா,”

அன்புள்ள அம்மாவுக்கு,

இத எழுத மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.அப்பாவும் நீயும் கண்டிப்பா எதிர்ப்பீங்கன்னு தெரியும் அதனால வேற வழியில்ல நானும் என் லவ்வரும் ஓடிப்போலாம்னு முடிவு எடுத்துட்டோம்.

முனுசாமி ரொம்ப ஸ்மார்ட்டான பையன் அழகா பச்சை குத்திக்குவான், சேறடிச்ச கலர் பேண்ட், ஃப்ரென்ச் தாடி இப்டி அவன் டேஸ்ட் வித்யாசமானது. அதில்லாம நான் இப்போ கர்ப்பமாயிருக்கேன்.அவனுக்கு முதுமலை பக்கத்துல ஒரு கிரவுண்ட் நிலம் இருக்கு அதில என்ன நல்லா பாத்துப்பேன்னு சொல்லியிருக்கான்.அவனுக்கு நிறைய குழந்தை பெத்துக்க ஆசையாம் எனக்கும் அதான் ஆசை.அவன் லாரி நல்லா ஓட்டுவானாம் அதனால ஒரு க்ளீனராவாச்சும் சேருவேன்னு இருக்கான்.இப்போதைக்கு எங்கள காப்பாத்திக்க அது போதும், அதே நேரத்தில எயிட்சுக்கு சீக்கிரமாவே மருந்து கண்டு பிடிக்கணும்னு கடவுள வேண்டிக்கிங்க முனுசாமிக்கு எயிட்சுன்னு அவன் சந்தேகப்படுறான்.

கவலைப் படாதீங்கம்மா எனக்கு 15 வயசாகுது வாழ்க்கையை பத்தி எனக்கு இப்ப நல்லாவே தெரியும் ஒரு நாள் உங்க பேரக் குழந்தைங்களோட கண்டிப்பா வர்றேன்.

உங்கள் மகள்,
பிரியா

பின் குறிப்பு: மேல சொன்ன எல்லாமே பொய். நான் கதவுக்கு பின்னாடி இருக்கேன்.டேபிள்ல இருக்கிற என்னோட ரேங்க் ஷீட்ட விட வாழ்க்கைல மோசமான விஷயங்கள் இருக்குன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்தத்தான் இத எழுதினேன் உங்க கோபம் தீர்ந்ததும் என்னை கூப்பிடவும்."

Categories: ,

posted by Thats Secret at 12:05 PM

1 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

சூப்பரான கடிதம்... நல்ல ஐடியா.. என் மார்க் ஷீட் குடுத்தப்போது இதெல்லாம் எனக்குத் தோணவே இல்லயே...

12:31 PM  

கருத்துரையிடுக

<< Home