Still Single? Search, meet and marry. Find your life partner online

சனி, மார்ச் 18, 2006

ரஜினி அல்லது விஜயகாந்த் அடுத்த படம் (மெயிலில் வந்தது)

என் சரக்கையும் சேர்த்திருக்கிறேன் ஒரிஜினல் படித்தவர்களுக்கு வித்தியாசம் புரியும்

படத்தின் பெயர் கேப்டன் ப்ரபாகரன் ப்ளானட் கதைப்படி எடுத்தவுடனே ஜெயில் கைதியா ஹீரோ (786 நம்பர்) அங்கன இருக்கற தூக்கு தண்டனைக்கைதிகள் அவர வம்புக்கிழுக்கிறாங்க ஒரு சண்ட போட்டு அவங்கள நண்பர்களாக்கிகிறார் (அதெப்படி சண்ட போட்டு) "எப்படி ஜெயிலுக்கு வந்தே"ன்னு ஒரு கைதி (சந்திர சேகர்) கேக்குறார்,
ஃப்ளாஷ் பேக்...

ஹீரோ நாஸால வேளை பாக்குற ஒரு (ஜீனியர்) சைன்டிஸ்ட் (?!@#). டென்ஷன் ஆக வேண்டாம் அதே அமெரிக்கால இருக்கற நாஸா தான் (கலைப்புலி தானு கண்டிப்பா ஒரு பெரிய செட் போடுவார்) அங்க ப்ளூட்டோவுக்கு சேட்டிலைட் அனுப்புற வேலை தீவிரமா நடக்குது.ஆனா விஜய காந்த்தோட வைஃப் சிம்ரன் கர்ப்பமா இருக்காங்க, அதுவும் பிரசவ நேரம் ஹீரோ பக்கத்துல இருக்கணும்னு ஆசப்படுறாங்க (சென்டிமென்ட்) ஆனா எப்படி முடியும்? ஹீரோவ விட்டா ப்ளூட்டோவுக்கு யாராலயும் சேட்டிலைட் அனுப்ப முடியாதே (ஏன் மத்தவங்க எல்லாரும் அல்லகையா?)

இங்க தான் கூட வேல செய்யற மத்த (அமெரிக்க விஞ்ஞானி )வில்லன்களுக்கு இவர் மேல பொறாம வருது. “ நீ இந்த சேட்டிலைட்ட பாய்ச்சுன உன் பொண்டாட்டி மேல கத்திய பாய்ச்சுடுவோம்”ங்கிறாங்க (இங்கிலீஷ்ல தான்) நம்மாளுக்கு ஒண்ணும் புரியல (இங்லீஷ் இல்லப்பா ஏன் இவங்க இப்படி மெரட்டுறாங்கன்னு) அங்கன ஒரு லெந்த்தி டயலாக் பேசறாரு “ஹ்ம்ஹிஹ்ம் டேய் நீங்க ஏன் இப்படி பேசறீங்கன்னு இப்ப புரியுது, உங்க தலைவன் ஜார்ஜ் புல் (புஷ்ஷை தாக்குகிறார்) தானே இந்தியன் அதுலயும் ஒரு தமிலன் பேர் வாங்கிடக்கூடாதுன்னு உங்கள இப்படி பேச சொன்னான்” அப்பிடி அமெரிக்கால ஆரம்பிச்சு லோக்கல் பாலிடிக்ஸ் வர பின்னிப் பிடலெடுக்கிறார். இவன்ட்ட பேசினா வேலைக்கு ஆகாதுன்னு விஞ்சானியெல்லாம் போட்டிருந்த வெள்ளைக்கோட்ட கழட்டுறாங்க (எதுக்கு? ) பாத்தா எல்லாரும் செம பாடி அப்ப தான் தெரியுது பேசிக்கிட்டிருந்த வில்லன் அர்னால்ட் (அம்மே) அப்டியே ஒரு ஃபைட், கடைசில அர்னால்டு மட்டும் கடைசி வர தாக்குப் பிடிக்கிறாரு யாரா இருந்தாலும் நம்ம கேப்டன்கிட்ட முடியுமா? முஷ்டி மடக்கி கேமரால காட்டுறார் (கட்சிக்கொடி மோதிரம் நோட் பண்ணுங்கப்பா ) ஒட்டே குத்து.

அப்டியே ப்ளுட்டோ ப்ராஜக்ட் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு சிம்ரனை கொன்னுடறாங்க ஆனாலும் போய் ப்ராஜக்ட்டை சக்ஸஸ் பண்றார்.என்ன பண்ண கொலைப்பழி விஜய காந்த் மேலயே விழுது இந்திய ஜெயிலுக்கு அனுப்பிடறாங்க. இது தான் ஃப்ளாஷ் பேக்.

இப்ப தான் பூமிக்கு ஒரு பிரச்னை வருது, இன்னும் 10 நாள்ல பூமி மேல ஒரு கோள் இடிக்கப் போகுதுன்னு நியூஸ் வருது. வழக்கம் போல ஹீரோவால மட்டுந்தான் காப்பாத்த முடியும்னு அமெரிக்க பிரதமர் (அண்ணா யூனிவர்ஸிட்டியில் படிக்கும் வெளி நாட்டவர்) மற்றும் இந்தியப்பிரதமர் (ஹார்லிக்ஸ் அப்பா) கேட்டுக்கிறாங்க தன்னால முடியாதுன்னு மறுத்துடறார் -ஹீரோ. ஆடியன்ஸ் இந்த இடத்தில அரண்டுடுவாங்க (#$) இடைவேளை

சிம்ரனம்மா வேற புகையாட்டமா வந்து காப்பாத்துங்கன்னு கேக்குறாங்க.அப்ப தான் அர்னால்டு கோஷ்டி ஃபோன் பண்ணி (ஜெயில்ல ஃபோன்?) காப்பாத்தக்கூடாதுன்னு மெறட்டுறாங்க. ”அதுவும் உலகமே அழிஞ்சாலும் பரவாயில்ல இந்தியா அழியனும் அதுவும் தமிழ் நாடு முஷ்கி க்யா கர்த்தி ஹே" (சத்தியமா எனக்கு இந்தி தெரியாது)
அப்டிங்கறாங்க.உடனே சீறி எழற சிங்கமா புறப்படறார் ஹீரோ

அப்பிடியே கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் முன்னாடி வெறிச்சு பாக்கறதக் காட்டுறாங்க மீட்டிங்ல தான் கண்டுபிடிச்ச கருவியக் காட்டுறார் அது தான் ‘ப்ளானட் ரெஃப்லக்டர்’ நிலாவுக்கும் பூமிக்கும் நடுவில நின்னு 5 பேர் சேந்து தான் அத வச்சு எதிர்ல வர்ற ப்ளானட் மேல காட்டி அத விலகிப்போகச் செய்ய முடியும். அதுக்கு மத்தவங்கள் நம்பாம தன் கிட்ட கத கேட்ட (கொடுமைக்காக) தூக்கு தண்டனைக் கைதிகளை செலக்ட் பண்ணி கூட்டிட்டு போறார்.

க்ளைமாக்ஸ்: சரியா நிலாவுக்கும் பூமிக்கும் நடுவில நிக்கைல ப்ளானட் எதிக்க வருது. அப்ப பாத்து நம்ம அர்னால்டு ( நாசமாப் போனவன்னு கிராமத்துத் தாய்க்குலங்கள் திட்டும் இடம்) பூமியிலே இருக்கிற சர்வீஸ் ஸ்டேஷனப் புடிச்சு கனக்ஷன் கட் பண்ணிடறார். மிஷின்ல பவர் கட்டாகிடுது நம்மாளு கையோட கொண்டு வந்த பேட்டரியப் போடுறார் (@#$!) ஆனா அதுவும் வொர்க் ஆகலை, ப்ளானட் பக்கத்துல வந்துடுச்சு எல்லார் முகத்திலயும் எப்படி காப்பாத்தப் போறாரோன்னு டென்ஷன் பரவறதக் காட்டறோம் (குழந்தைகளை தியேட்டருக்கு கூட்டிப் போக வேண்டாம் இந்த இடத்தில் பதறிக் கதறி அழும்) அப்டியே பூமில லெஃப்ட் கால வச்சு ஒரே உதை அந்தக் கிரகம் பிடிச்ச கோளுக்கு.பெக்காம் உதைச்ச ஃபுட்பால் மாதிரி அப்டே பறக்குது பூமில ஜெயில் வார்டனா இருந்த தெலுங்கு புது முக நடிகை கண்ணீரோட குதிக்கிறார். நாஸாவுல அப்ரசின்டாவும் ஜெயில்ல கைதியாவும் இருந்த வடிவேலு லைட்டா ஒரு காமெடி போட்றார்.
அவ்ளோதான்ப்பா

குறிப்பு : ஹீரோ இரட்டை வேடம், இரு கதாநாயகிகள், ஒரு ஜெயில் குத்துப் பாடல், சில பல பஞ்ச் டயலாக்ஸ் எல்லாம் வேண்டுமானால் சேர்க்கப்படும் சிவாஜி படத்துக்கு அப்புறம் ரஜினி, விஜய காந்த் மற்றும் விஜய், சிம்பு அஜீத் ஆகிய அனைவருக்கும் பொருந்தும், கதை காப்பிரைட் செய்யப்பட்டது (?!)

Categories:

posted by Thats Secret at 4:55 PM

1 Comments:

Blogger யோசிப்பவர் said...

கோகுல்! இந்த மெய்லை அப்படியே கொஞ்சம் எனக்கும் தட்டிவிட முடியுமா? எனது முகவரி yosippavar@yahoo.co.in

5:42 PM  

கருத்துரையிடுக

<< Home