“கடவுளின் குதிரை”
ஒருத்தர் குதிரை வாங்க போனாராம் அங்க ஒருத்தன் “கடவுளின் குதிரை”ன்னு ஒண்ணை வித்துக்கிட்டிருந்தான்.இவரு விவரம் கேட்க வியாபாரி சொன்னான்”இது கெளம்பணும்னா கடவுளுக்கு நன்றின்னு சொல்லனும்”, நிறுத்தணும்னா “கடவுளே காப்பாத்துன்னு சொல்லணும்”.அது பாக்கவும் நல்லா இருக்க அவர் இம்ப்ரஸ் ஆகி வாங்கிட்டாரு.ஊருக்கு வந்து குதிரை மேல ஏறி உட்கார்ந்து கடவுளுக்கு நன்றின்னாராரு,குதிரை புயல் மாதிரி பறக்க ஆரம்பிச்சிருச்சி.ஒரு மலை உச்சியில வேகமா போக அவருக்கு பயம் வந்து குதிரைய எப்படி நிறுத்தறதுன்னு மறந்துட்டாரு.இன்னும் ரெண்டு அடி போனா பாதாளத்தில விழுந்துடுவோம்கிற நிலைமை அவரையும் அறியாம ‘கடவுளே காப்பாத்து’ன்னாரு.பொசுக்நு குதிரை நின்னுடிச்சி. ஆசுவாசப்படுத்திட்டு சொன்னார்:’கடவுளுக்கு நன்றி’
Categories: god
Categories: god
posted by Thats Secret at 9:50 PM


0 Comments:
கருத்துரையிடுக
<< Home