Still Single? Search, meet and marry. Find your life partner online

ஞாயிறு, ஜனவரி 08, 2006

குழப்பம்

ஒரு பெங்களூரி, ஒரு மதராஸி ,ஒரு சர்தார்ஜி மூணு பேரும் ஒண்ணா ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில வேல பாத்தாங்களாம்
தினம் மதியம் ஒண்ணா மொட்ட மாடில உக்காந்து சாப்பிடுவாங்களாம்
அன்னைக்கும் அதே மாதிரி ஒண்ணா சாப்பிட முதல்ல பெங்களூரி டிபன் பாக்ஸ்ஐ திறக்க இட்லி இருக்க சலிப்பா சொல்றான் ," நாளைக்கும் இட்லியே இருந்தா நான் இங்கிருந்து குதிச்ச்டுவேன்".
மதராஸி பாக்ஸ்ஐ திறக்க அவனுக்கும் இட்லி
கடுப்பாகி " நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"னான்
அடுத்தது சர்தார் திறக்க அதுலயும் இட்லி, " அவரும் நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"ன்னார்

மறு நாள்
பெங்களூரி டிபன் பாக்ஸ் திறந்தா அதே இட்லி
மறு பேச்சு பேசலை எட்டாவது மாடிலேர்ந்து குதிச்சிட்டார்

மதராஸி பயத்தோட திறக்க அங்கயும் இட்லி
அவரும் குதிச்சிட்டார்

சர்தார்ஜி திறக்க மறுபடியும் இட்லி
அவரும் குதிச்சிடறார்

எழவு அன்னைக்கு மூணு பேர் மனைவிகளும் சந்திச்சிக்கிறாங்க
மதராஸி மனைவி ,"அய்யய்யோ இப்டி பண்ணிட்டீங்களே உங்களுக்கு பிடிக்கலைனா செஞ்சிருக்கவே மாட்டேனே"
பெங்களூரி மனைவி ,"ஆமாங்க ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்க கூடாதா தோசை தந்திருப்பனே"
சர்தார்ஜி மனைவி ,"அய்யய்யோ எனக்கு ஒண்ணுமே புரியலயே அன்னைக்கு நீங்க தானே சமைச்சீங்க"

Categories: ,

posted by Thats Secret at 8:02 PM

1 Comments:

Blogger G.Ragavan said...

கலக்கல் ஜோக்.

12:02 PM  

கருத்துரையிடுக

<< Home