Still Single? Search, meet and marry. Find your life partner online

வியாழன், ஜனவரி 05, 2006

கங்குலிய விடவே மாட்டாங்க

இது லேட்டஸ்ட் ஜோக்
கங்குலி சீயானாகவும் , சேப்பல் அபித் குஜலாம்பாளாகவும் கற்பனை செய்து கொள்ளவும்.

( ஒரு வேளை சேப்பல் தான் செலெக்க்ஷன் கமிட்டி தலைவரோ என்று கங்குலிக்கு சந்தேகம் வந்ததால் அவரை கடத்தி கட்டி போட்டு விட்டு பேச ஆரம்பிக்கிறார்)

"ஒரு காலத்தில ரொம்ப சந்தோஷமா இருந்தேன்யா....

என்னைக்கு உன்ன கோச் ஆ போட சொன்னேனோ அப்ப புடிச்சது சனியன்
நானும் முன்னெல்லாம் நினைப்பேன் ஏன்டா இப்டி, மொட்டை வெயில்ல, லோகல் கவுன்டி மேட்ச்ல ,பசங்க ரஞ்சி ட்ராபி வெளையாடுராங்களோ தெரியல... அப்டின்னு...

ஆன, உங்கிட்ட மாட்டிகிட்டு, "டீம் லிஸ்ட்'ல பேரு வருமா....?? வராதா....??" அப்டினு கொஞ்சம், கொஞ்சமா நெயில் பைட்டிங் பண்றதுக்கு பதிலா, கவுன்டி மேட்ச்'ல கட்டை போடுறது எவ்வளவோ மேல்...போல இருக்கே...

பயப்படாத...
உன்னய நான் கிள்ளி விட மாட்டேன்...
ஏன்னா.... நீ BCCI சேர்மேன் ஆச்சே....!!!!,
என்னடா............., இவன் "சேர்மேன் " அப்டி,இப்டின்னு பேசுறான்னு பாக்கறியா......

உன்னய யெப்பவோ, சேர்மேன் ஆக்கிட்டாங்க தெரியுமா ???...
நான் சென்சுரி அடிச்சு, 3 Australian சீரியஸ் கூட வின் பண்ணியாச்சு....
நான் வொர்ல்ட் கப் வாங்கிட்டு வரேன்.....பட் டாஸ் போட்ட காயின் வேணும் அப்டின்னு நீ கோவிச்சிசுக்கற......
ஓரு நாள் உனக்கு உடம்பு முடியாம போயிடுது, உடனே உனக்கு நான் வேப்பில அடிக்கறேன்..." இப்டி கனவிலயெ வாழ்ந்தாச்சு... இன்னமும் முடியாதுன்னு ஒண்ணுமில்ல... அது டீம்லிஸ்ட்'ல என்னொட inclusionதான்.. "

[ சேப்பல் தப்பிக்க முயல்கிறார் கங்குலி சுவற்றில் அடித்து உட்கார வைக்கிறார்....]

"பாரு... !!!
போட்டு தள்றதுக்காக.. உன்னய நான் இங்க கிட்னாப் பண்ணிட்டு வரல.......உன் கூட பேசணும் ...அவ்ளோ..தான்....

உன்கூட இருப்பானே கேப்டன் ராகுல் ட்ராவிட்.....த்தா...!!!

அவன் நல்ல பேட்ஸ்மேன் தான்.. நான் இல்லனு சொல்லல...

ஆன, வைட் பால்'ல அவனால எப்டி சிக்ஸ் அடிக்க முடியும்...

பாரு,
வெட்டியா பிட்சுல நின்னுகிட்டு கட்டய போட வேண்டியது தான்..இப்டி..இப்டி..[ கங்குலி பேட் வெச்சி ஸ்ட்ரோக் போட்டு காட்டுகிறார்... ] ...

ட்ராவிட் ஓப்பனிங் எறங்கறத நெனச்சாலெ...ஆஆ அஹ்...தலயே வெடிச்சிடும் போல இருக்கு....!!!


புரிஞ்சிக்கோ...!!!!
மனசு...!!!
வலிக்குது...!!!![background music...ஹோ...ஹொ..ஹொ..ஹோ...]...


நீ எல்லாம் ஆஸ்ட்ரேலியன் டீம்'க்கே கோச்சா இருக்க வேண்டியவன்......

உனக்கு எந்த கஷ்டமும் வராம, நான், என்னொட ஃபேமிலி, கோகோ கோலா எல்லாம் பார்த்துப்போம்.....

என்னமொ இதெல்லம் எனக்காக மட்டும் தான் சொல்றென் அப்டின்னு நெனைக்காத...உ...உனக்கும் 50% தர்றென்...

பாரு.......,
நீ எப்பவும் பேட்டும் ,பாலுமா இருக்கணும்.......எனக்கு கோச்சிங் குடுத்துக்கிட்டே இருக்கணும்..அதான் என்னொட ஆசை..."


[ கொஞ்சம் டென்ஷனாகிறார் ...]

" இவ்வளோ............, சொன்னதுக்கு அப்றமும்........,

"இல்ல...!!
நீ ஃபார்ம்'ல இல்ல....... நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்
கல்லி பொசிஷன்'ல அவுட் ஆயிடுவேள்......!!!
நேக்கு ஒன்னும் உன்னய டீம்'க்கு எடுக்க தோணல......!!! " அப்டின்னு சொன்னேனு வெச்சுக்க...[ பாக்கெட்டில் இருந்து சீப்பு ஒன்று எடுக்கிறார்..] ...உன்னோட தலைய சீவிடுவேன்...

உன்னொட தலைய சீவிட்டு அப்றம் எனக்கென்ன வேல........சீப்ப தொடச்சுட்டு ரிட்டயர்ட் ஆகிட வென்டியது தான்...

ரொம்ப ரண வேதனயா இருக்குயா......

உன்னய கெஞ்சி கேட்டுக்கறேன்..."

[ சேப்பல் கெட்ட வார்த்தையாக முனகுகிறார்..]

கங் : "என்ன ஆச்சு...ஏன் அழற...சேர்த்துக்கலையா... ??? "
க்ரெக் : " ம்..ம்..."
கங் : " அப்பொ.....? சேர்த்துக்கறியா ... ???"
க்ரெக் : " ம்ம்..ம்ம்..ம்ம்...வேண்ணா பன்னெண்டாவது பேட்ஸ்மேனா எடுக்கறேன்"
கங் : " அது போதும்..யெனக்கு...அய்யா...ஜாலி..."

[ background song ....]

["நெனச்சி..நெனச்சி..தவிச்சி..தவிச்சி..உருகி..உருகி..கிடந்த மனசு விளம்பரம் நடிக்க ஒடுதே... "]
"

Categories:,

posted by Thats Secret at 7:55 PM

1 Comments:

Blogger Unknown said...

Gokul.. Paarthu irunga Kolkatta kaaranga yaarvathu tamizh therinji padichaa appuram neenga PITHAMAGAN
aayida poreengaa...

Poor ganguly... Why cant people just leave him at peace? He was the second Indian to lead our team to a world cup final after KapilDEv..

avarukku intha nilamaiyaa...

Check out my post on ganguly issue
http://chennaicutchery.blogspot.com/2005_12_01_chennaicutchery_archive.html

10:33 AM  

கருத்துரையிடுக

<< Home